Saturday, 20 March 2021

இலக்கணவகைச் சொற்கள்


 

தமிழ்ச் சொற்கள் இலக்கண வகையாலும் நான்கு வகைப்படும்.  

அவை,  பெயர்ச்சொல், வினைச்சொல்,   இடைச்சொல்,   உரிச்சொல்

ஆகியனவாகும்.   ஒவ்வொன்றையும் பற்றிச் சிறிது விளக்கமாகக்

காண்போம்.
 

2.4.2.1 பெயர்ச்சொல்
 

இளங்கோவடிகள் சிறந்த புலவர்.
யானை காட்டில் வாழ்கிறது.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.
 

இத் தொடர்களில் உள்ள,   இளங்கோவடிகள்,   யானை,   

மரம் ஆகிய சொற்கள் பெயர்களைக் குறிக்கின்றன.

இவ்வாறு பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் –

Noun எனப்படும்.
 

இத்தகைய பெயர்ச்சொற்களைப் பொது நிலையில்

இடுகுறிப்பெயர்,  காரணப்பெயர் எனப் பிரித்து

வகைப்படுத்துவர்.

இது குறித்துப் பார்ப்போம்.
 

இடுகுறிப் பெயர்
 

‘நிலம்’, ‘காற்று’ ஆகிய சொற்கள் எவற்றை உணர்த்துகின்றன

என்பது நமக்குத் தெரியும். ஆனால், அப் பெயர்கள் ஏற்படக்

காரணம்என்ன என்பது தெரியாது. காரணம் எதுவும் இல்லாமல்

நம் முன்னோர்வழங்கியவாறே நாமும் வழங்கி வருகிறோம்.

இவ்வாறு,காரணம் கருதாமல், இப் பொருளுக்கு இந்தப் பெயர்,

எனத் தொன்றுதொட்டு இட்டு வழங்கி வரும் பெயர்

‘இடுகுறிப்பெயர்’ எனப்படும்.
 

காரணப் பெயர்
 

‘நாற்காலி’, ‘முக்கண்ணன்’, ‘முக்கோணம்’ இவை எவற்றை

உணர்த்துகின்றன என்பதும், என்ன காரணத்தால் அப்பெயர்

பெற்றன என்பதும் நமக்குத் தெரியும்.
 

நான்கு கால்களை உடைய காரணத்தால், நாற்காலி என்ற

பெயரைப் பெற்றது; மூன்று கண்களை உடையவனாதலால்

 முக்கண்ணன் எனப்பட்டான். எனவே, இவை, காரணம்

கருதி இடப்பட்ட பெயர்கள் என்பதை அறியலாம்.

இவ்வாறு, காரணங்கருதி இட்டு வழங்கும் பெயர்

காரணப் பெயர் எனப்படும்.
 

2.4.2.2 வினைச்சொல்
 

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
அமுதா பள்ளிக்கூடம் சென்றாள்.
விளக்கு எரிந்தது.
 

இத் தொடர்களில் உள்ள, இயற்றினார், சென்றாள், எரிந்தது

என்பவை,திருவள்ளுவர், அமுதா, விளக்கு முதலான

பெயர்களின் வினையை அல்லது

செயலைக் குறிக்கின்றன. இவ்வாறு, வினையைக்

குறிக்கும் சொல் வினைச்சொல் - Verb எனப்படும்.
 

2.4.2.3 இடைச்சொல்
 

கல்வியால் அறிவும் பண்பும் பெறுவோம்.
 

இச் சொற்றொடரில், ‘அறிவும் பண்பும்’ என்பனவற்றில்

உள்ள ‘உம்’ (அறிவு+உம், பண்பு+உம்) ‘பெறுவோம்’ என்பதில்

உள்ள ‘ஓம்’  (பெறு+ஓம்)  இவை யாவும் பெயர்ச் சொல்லையும்

வினைச் சொல்லையும் இடமாகக் கொண்டு வருகின்றன.

இவ்வாறு, பெயரையும் வினையையும் இடமாகக் கொண்டு

வரும் சொல் இடைச்சொல் - Conjunctions or Particles எனப்படும்.
 

2.4.2.4 உரிச்சொல்
 

கடி நகர்.
நனி மகிழ்ந்தான்.
 

‘நகர்’ என்னும் பெயர்ச்சொல்லையும் ‘மகிழ்ந்தான்’ என்னும்

வினைச்சொல்லையும் சார்ந்து நின்று, முறையே,

‘காவல் மிகுந்த நகரம்’ (கடி-காவல்) ‘மிகவும் மகிழ்ந்தான்’

(நனி-மிகவும்) என அவற்றின் தன்மையை எடுத்துரைக்கின்றன.

மேலும், செய்யுளுக்கே உரியதாகவும் விளங்குகின்றன.

ஆதலால் இவை (கடி, நனி) உரிச்சொற்கள் - Attributive.
 

இவ்வாறு, பெயர், வினை ஆகியவற்றைச் சார்ந்து

அவற்றின் தன்மையை விளக்கிச் செய்யுளுக்கே

உரிமையுடையதாய்

வருவது உரிச்சொல் எனப்படும்.
 

இந்த உரிச் சொல்லானது,  ஒரே பொருள் தரும் பல

   உரிச்சொல்எனவும்,  பல பொருள் தரும் ஓருரிச்சொல்

எனவும் இரண்டு

வகைப்படும்.
 

I. ஒரே பொருள் தரும் பல உரிச்சொல்
 

சால, உறு, தவ, நனி, கூர், கழி இவை யாவும் ‘மிகுதி’

என்னும் ஒரே பொருள் தருவன.
 

II. பல் பொருள் தரும் ஓர் உரிச்சொல்
 

‘கடி’ என்னும் சொல்லானது காப்பு, கூர்மை, மணம், விளக்கம்

 அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல், வரைவு,

 மன்றல், கரிப்பு ஆகிய பல பொருள்களைத் தரும்.

 

a

No comments:

Post a Comment

7th Maths

  Chapter 1 Number System Intext Questions 1. Write the following integers in ascending order: -5,0,2,4, -6,10, -10 2. If the integers -15, ...