Saturday, 13 March 2021


 

சார்பெழுத்து பத்து வகைப்படும். அவையாவன,

 

1. உயிர்மெய6. குற்றியலிகரம்
2. ஆய்தம்7. ஐகாரக் குறுக்கம்
3. உயிரளபெடை8. ஔகாரக் குறுக்கம்
4. ஒற்றளபெடை9. மகரக் குறுக்கம்
5. குற்றியலுகரம்10. ஆய்தக் குறுக்கம்

 உயிர்மெய்
 

ஓர் உயிர் எழுத்தும்,  ஒரு மெய் எழுத்தும் சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்தாகும். ஒவ்வொரு உயிர் எழுத்தும் பதினெட்டு மெய் எழுத்துகளோடும் தனித்தனியே சேர்வதால் 216 உயிர்மெய் எழுத்துகள் பிறக்கின்றன.

மாணவர்களே! ஓர் எழுத்தைப் பார்த்தவுடன் அது, உயிர் எழுத்தாயின் குறிலா?  நெடிலா?  என்பதையும் மெய் எழுத்தாயின் வல்லினமா?  மெல்லினமா?  இடையினமா? என்பதையும் உயிர்மெய்யாயின் இனத்தை அறிவதோடு குறிலா?   நெடிலா?   என்பதையும் அறிந்துகொள்ளும் திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ளல் வேண்டும்.
 

உயிர்மெய்யா? மெய்யுயிரா? எது சரி? ஏன்? உயிர்மெய் எழுத்துகளைப் பிரித்துப் பார்த்தால், முதலில் மெய்யும் அடுத்து உயிரும் நிற்கும்.
 

க = க் + அ.
 

இதனை, மெய்யுயிர் என்றுதான் கூறவேண்டும். ஆனால், உயிர்மெய் என்று கூறுகிறமே! அது ஏன்? உயிர் எழுத்தின் தலைமையும் சிறப்பும் கருதி உயிர்மெய் என்று வழங்குகிறோம் என்பதனை அறிந்துகொள்க.
 

ஆய்தம்
 

தமிழ் எழுத்து வரிசையில் ‘ஃ’ இவ்வாறு வரும் எழுத்தே ஆய்த எழுத்து ஆகும். மூன்று புள்ளிகளாக எழுதப்படும் இந்த ஆய்த எழுத்திற்கு ‘அஃகேனம்’, ‘தனிநிலை’, ‘முப்புள்ளி’ என வேறு பெயர்களும் உண்டு.
 

ஆய்த எழுத்து, தனக்கு முன்னர் ஒரு குறில் எழுத்தையும் பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே உச்சரிக்கப்பெறும்.
 

அஃது = இதில் ‘அ’ குறில்; ‘து’ வல்லின உயிர்மெய்.
 

எஃகு = இதில் ‘எ’ குறில்; ‘கு’ வல்லின உயிர்மெய்.


குற்றியலுகரம்
 

குற்றியலுகரம் தமிழில் குறிப்பிடத்தகுந்த சார்பெழுத்தாகும்.  பேச்சிலும் எழுத்திலும் மிகுதியாக வழங்குவது. எனினும், இதற்குத் தனி எழுத்து வடிவம் இல்லை.
 

சொல் இறுதியில் வல்லின மெய்யின்மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.  இது அரை மாத்திரை பெறும்.
 

ஒரு மாத்திரை அளவு ஒலிக்க வேண்டிய உகரம்,  அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம் எனப்படும். குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். (குறுமை - குறுகிய; இயல் - இசை (ஓசை); உகரம் - ‘உ’என்னும் எழுத்து.)
 

க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறு வல்லின எழுத்துகளோடும் ‘உ’கரம் சேர்ந்தால் கு, சு, டு, து, பு, று என்னும் ஆறு எழுத்துகள் தோன்றும். எ.கா. க்+உ=கு
 

இந்த ஆறு எழுத்துகளில் ஒன்று, தனி நெடிலுடனோ பல எழுத்துகளைத் தொடர்ந்தோ இறுதியில் வந்தால், அந்த எழுத்தில் உள்ள உகரம் அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.
 

1)  ‘காசு’ இதில், தனி நெடிலை அடுத்து, வல்லின மெய்யோடு (ச்) சேர்ந்த உகரம் (சு) வந்துள்ளது. இந்த உகரம் அரை மாத்திரை அளவே ஒலிக்கும்; முழு அளவில் ஒலிப்பதில்லை.
 

2)  ‘பந்து’ இதில், பல எழுத்துகளைத் தொடர்ந்து இறுதியில் வல்லின மெய்யுடன் (த்) சேர்ந்த உகரம் (து) வந்துள்ளது. இந்த உகரமும் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் (‘பந்த்’ என்று ஒலிக்கின்றோம்). இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரமாகும்.
 

குறில் : அகரம், உகரம், சகரம், மகரம் 

நெடில் : ஆகாரம், ஊகாரம், ஐகாரம், ஔகாரம் 

மெய் : க, ச, ட, த, ப, ற...
 

தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்

(குறுகிய ஓசையுடைய உகரம்)
எ.கா:

நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

பந்து என்னும் சொல்லில் கடைசியாக உள்ள து என்னும் எழுத்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் பல் எழுத்துகளைத் தொடர்ந்து இறுதியில் வல்லின மெய்யோடு (த்) சேர்ந்த உகரம் (து)வந்துள்ளது. இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேட்டு, பேச்சு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம். 


குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.[1][2][3]

எடுத்துக்காட்டு

  • நாடு + யாது -> நாடியாது
  • கொக்கு + யாது -> கொக்கியாது

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்


உயிரளபெடை

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்குஉயிரளபெடை எனறு பெயர்.

உயிர் + அளபெடை = உயிரளபெடை

மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.

இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ
                                                   -நன்னூல்

எ.கா:

1ஓஒதல் வேண்டும்முதல்
2கெடுப்பதூஉம் கெட்டார்க்குஇடை
3நல்ல படாஅ பறைகடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காணலாம்.

ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.

இதில்

செய்யுளிசை அளபெடை,  இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்று வகைகள் உள்ளன.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. [1]

இந்தத் திருக்குறள்

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை

என அமைந்திருப்பினும் வெண்டளை இலக்கணத்தில் பிழை நேராது. அப்படி இருக்கையில் அளபெடை கூட்டப்பட்டிருப்பது இன்னிசைக்காக என்பதை உணரலாம்.






No comments:

Post a Comment

7th Maths

  Chapter 1 Number System Intext Questions 1. Write the following integers in ascending order: -5,0,2,4, -6,10, -10 2. If the integers -15, ...