தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,
உனக்கு நான் ! எனக்கு நீ !! இச்சமுதாயத்திற்கு நாம் !! தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் ! உயர்வோம் !!
Thursday, 15 April 2021
தமிழ் இலக்கணம்
1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி
அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.
எழுத்து
முதலெழுத்து
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
· மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும். மெய்யெழுத்துக்கள் வல்லினம்,மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.
சார்பெழுத்துகள்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஔகாரக் குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்
எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன
இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216) மற்றும் ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
7th Maths
Chapter 1 Number System Intext Questions 1. Write the following integers in ascending order: -5,0,2,4, -6,10, -10 2. If the integers -15, ...
-
Historically computers were classified according to processor types because development in processor and processi...
-
தமிழ் மொழி , இயற்றமிழ் , இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்கு...
No comments:
Post a Comment